கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆழிச்சிக்குடி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிக்கு முன்னாள் முதல் அமைச்சர், கர்ம வீரர் காமராசர் அவர்களின் 122வது பிறந்த நாளை முன்னிட்டு புவனகிரி அரிமா சங்கத்தின் சார்பில் ஸ்டீல் மேஜை, நாற்காலிகள், மின்விசிறிகள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் புவனகிரி அரிமா சங்க தலைவர் பேராசிரியர் பாலசுப்ரமணியன், செயலாளர் முரளி, பொருளாளர் பாலமுருகன் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் சேதுராமன் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியை லீலாவதி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment