ஸ்ரீமுஷ்ணம் அருகே தெற்கு பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் 122வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 July 2024

ஸ்ரீமுஷ்ணம் அருகே தெற்கு பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் 122வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையங்கோட்டை தெற்கு பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இவ்விழா ஊராட்சி மன்ற தலைவர் வினிதா முருகன் தலைமையில் நடைபெற்றது. 

சிறப்பு அழைப்பாளராக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குழந்தைவேல் கலந்து கொண்டார்  பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் மலைமாறன் அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளியின் ஆசிரியர்கள் வாசுதேவன் பீட்டர்ஆனந்தராஜ்  வீரபத்திரன்  கற்பகம் ஜூலிகிளாரா அன்புகனி வனிதா  அன்பரசி செல்வகுமாரி ஆகியோர் காமராஜர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் மேலும் ஆசிரியர்கள்  வாசுதேவன் பீட்டர் ஆனந்தராஜ் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.


இவ்விழாவில் மழலையர் வகுப்பு மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் காமராஜர் அவர்கள் பிறந்தநாளில் வாழ்க்கை வரலாறை பற்றி கவிதையாகவும் பாடலாகவும் நடனம் ஆடி பாடி அசத்தினர் இதில் ஏராளமான முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் என கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் . விழா முடிந்த பிறகு மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல், பிஸ்கட் போன்றவற்றை ஊராட்சி மன்ற தலைவர் வினிதா முருகன் அவர்கள் வழங்கினார். விழா இறுதியில் ஆசிரியர் அன்புக்கனி வனிதா நன்றி உரை கூறினார்.

No comments:

Post a Comment

*/