கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் காமராஜரின் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை நிகழ்ச்சி நடைபெற்று முடிந்து மாணவிகள் மதிய உணவு அருந்துவதற்காக செல்லும்போது அப்பள்ளியில் கீழே உள்ள வகுப்பறைக்கு செல்லும் வழியில் உள்ள 2 அடி உயரம் 8 அடி நீளம் உள்ள கைப்பிடி சுவற்றை பிடித்தபடி மாணவிகள் சென்றபோது சுவர் கீழே சாய்ந்தது இதில் அனன்யா-10 ஆம் வகுப்பு.ராபிதா - 11ஆம் வகுப்பு முகுல் சுபைதா- 11 ஆம் வகுப்பு. பாத்திமா-12 வகுப்பு ஆகிய நான்கு மாணவிகளுக்கும் அடிபட்ட நிலையில் மூன்று மாணவிகளுக்கு சிறாப்பு காயம் மற்றும் பாத்திமா என்னும் மாணவிக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது.
இதைக் கண்ட அப்பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக மாணவிகளை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்தனர் இச்சம்பவம் குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் அப்பள்ளியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment