கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே கம்மாபுரம், கோபாலபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆரம்ப காலத்தில் எடுக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஐந்து லட்சம் முதல் ஆறு லட்ச ரூபாய் வரை இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அப்போது நிலம் எடுக்கப்பட்ட பகுதிகள் இன்னமும் சுரங்கம் வெட்டாமல், இருந்து வரும் நிலையில் தற்போது அப்பகுதிகளுக்கு புதிதாய் நிலம் எடுக்கும் மதிப்பீட்டின்படி தாங்கள் முன்பு கொடுத்த நிலத்திற்குகூடுதல் இழப்பீடு கேட்டு மாவட்ட நிர்வாகம், என்எல்சி நிர்வாகம் உள்ளிட்ட பலவற்றிலும் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என வேதனையுற்ற இப்பகுதி கிராம மக்களும், விவசாயிகளும் பலதொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கம்மாபுரம் அருகே இரண்டாவது சுரங்கத்தின் அருகில் உள்ள பகுதிகளில் வயல்வெளியில் வேலி அமைப்பதற்காக வந்த என் எல் சி வாகனத்தை கிராம மக்கள் தடுத்து நிறுத்திதங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரமாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்த நிலையில், அங்கே வந்த காவல்துறையினர் மற்றும் என்எல்சி உயர் அதிகாரிகள் இன்னும் இரண்டு தினங்களில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சொன்னதன் பேரில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment