கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மேல் வளையமாதேவி கிராமத்தில் மூக்குத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இரண்டு சுவாமி சிலைகளின் கழுத்தில் இருந்த தலா 4 கிராம் என8 கிராம் தங்கம் மற்றும் இரண்டு உண்டியல்களில் இருந்த பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். நகையை திருடி முடித்த பிறகு அவர்கள் கண்காணிப்புக் கேமரா காட்சிகள் பதிவாகியுள்ள ஹார்ட் டிஸ்க்கையும் தூக்கிச் சென்று விட்டனர்.
கோவிலின் அறங்காவலர் கல்யாணசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்புபோலீசார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். தற்போது திருட்டு நடைபெற்றுள்ள கோவிலில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பும் திருடு நடைபெற்றுள்ளதாகக் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment