கடலூர் மாவட்டம் வடலூர் பண்ருட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே குண்டும் குழியுமாக இருந்த சாலையை பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக சரி செய்த ரயில்வே துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
நீண்ட நாட்களாக இந்த ரயில்வே கேட்டு அருகே இருந்த சாலை மழையின் காரணமாக சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்தது இதனால் இரு சக்கர வாகனத்தில் அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்துள்ளாவது தொடர்கதையாகி வந்த நிலையில் சேதமடைந்த சாலையை உடனடியாக சரி செய்யக்கோரி சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகைப்படத்துடன் பதிவிட்டு கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக குண்டும் குழியுமாக இருந்த சாலை ரயில்வே நிர்வாகத்தால் உடனடியாக சரி செய்யப்பட்டது இதனால் அவ்வழியே பயணிக்கும் இருசக்கர மற்றும் கனரக வாகன ஓட்டிகள் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment