பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 July 2024

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு


கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருங்கூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்நேற்று (20.07.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருங்கூர் ஊராட்சியில் செயல்பட்டுவரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வருகை பதிவேடு, மருந்து இருப்பு, ஆய்வகம், கழிவறை, மகப்பேறு பிரிவு மற்றும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 15-வது மானிய நிதித் திட்டத்தின்கீழ் புதியதாக கட்டப்பட்டுவரும் பொது சுகாதார மையக் கட்டடக் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மருங்கூர் ஊராட்சியில் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டுவரும் பணிகளையும், மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலமும், 15-வது மானிய நிதித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த கழிவறை கட்டுமானப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்கள்.


தொடர்ந்து, அவ்வூராட்சியில் அங்கன்வாடி மையக் கட்டடத்தில் மாணவர்களிடையே கலந்துரையாடி அங்கன்வாடி அமைப்பாளர் மற்றும் உதவியாளரிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் 2023-24ஆம் ஆண்டு நிதியாண்டின் கீழ் புதியதாக குளம் வெட்டும் பணிகளையும் மற்றும் மருங்கூர் ஊராட்சியில் தொல்லியல் துறை வாயிலாக அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


அதனை தொடர்ந்து, பயனாளிகளுக்கு தமிழக அரசின் மூலம் வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுவரும் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, காடாம்புலியூர் ஊராட்சியில் முடியும் தருவாயில் கட்டப்பட்டுவரும் சமத்துவபுரம் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியிலுள்ள பள்ளி செல்லா மாணவர்களிடையே கலந்துரையாடி பள்ளிக்கு செல்ல வேண்டுமென்று அறிவுறுத்தி கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையாக விசாரணை மேற்கொண்டு அன்பாக பேசி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பிவைக்க வேண்டுமென்ற அறிவுறுத்தினார்.


தொடர்ந்து, முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் முடிவுற்ற பனிக்கன்குப்பம்-சந்தைதோப்பு சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டுவரும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


இவ்வாய்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் திருமதி. இரா.சரண்யா மற்றும் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சபா.பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிகள் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

*/