கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள சீரங்குப்பம் கிழக்கு தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன் இவர் தனது வீட்டில் மெத்தை தயார் செய்ய தேவைப்படும் இலவம் பஞ்சுகளை சேகரித்து இலவம் பஞ்சு மெத்தைகள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார் இந்நிலையில் திடீரென பஞ்சு மூட்டை அடுக்கி வைத்த இடத்திலிருந்து புகை அதிக அளவில் கிளம்பியது இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் குறிஞ்சிப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் உத்ராபதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் அதற்குள் தீ முழுவதுமாக பரவி சுமார் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று லட்சம் மதிப்பீட்டிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதமானது
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment