கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கீரப்பாளையம்- சேத்தியாத்தோப்பு பரபரப்பான போக்குவரத்து சாலையில் ஒரத்தூர் கிராமப் பகுதியில் சாலையோரம் 50 ஆண்டுக்கும் மேற்பட்ட பழமையான புளியமரம் இருந்து வருகிறது.
இந்த மரம் தற்போது ஏதோ காரணத்தால் பட்டுபோய்விட்டதால் பூமியில் வேர் பிடிப்புக் குறைந்துஎப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் இருக்கிறது. இந்த சாலை அதிக போக்குவரத்து நிறைந்த சாலையாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இருசக்கர வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் பகுதியாகவும் இருக்கிறது. இந்த புளிய மரத்தை வெட்டி அகற்றக் கோரி நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டவர்களின் பார்வைக்கு கொண்டு சென்றும் இதுவரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
உடனடியாக பட்டுப்போய் காய்ந்த இந்த சாலையோர புளிய மரத்தை ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் முன்னர் அகற்றிட வேண்டும் என்பதே இப்பகுதி மக்கள் மற்றும் போக்குவரத்துப் பயணிகள், வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment