கடலூர் மாவட்டம் வடலூர் நான்கு முனை சந்திப்பு முதல் விருதாச்சலம் செல்லும் சாலையில் இருபுறமும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது வெளியூர்களிலிருந்து வடலூர் நோக்கி வாகனங்களில் வரும் மக்கள் சாலைகளில் அருகே உள்ள கடைக்கு தேனீர் அருந்தவும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காகவும் சாலையிலேயே வாகனத்தை நிறுத்தி விட்டு செல்வதால் இருசக்கர மற்றும் கனரக வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
வடலூர் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள முக்கிய பகுதியான இங்கு மாலை நேரங்களில் பொதுமக்கள் பலர் தேனீர் அருந்த கூடுவது வழக்கம் இந்நிலையில் போக்குவரத்து அதிகம் மிகுந்த நேரங்களில் இது போன்று சாலைகளில் வாகனங்களை நிறுத்தி செல்லும் வாகன ஓட்டிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment