சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடியில் தீ விபத்து.வீடு முற்றிலும் எரிந்து அனைத்துப் பொருட்களும் சேதம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 July 2024

சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடியில் தீ விபத்து.வீடு முற்றிலும் எரிந்து அனைத்துப் பொருட்களும் சேதம்.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடியில் தேசிய நெடுஞ்சாலை அருகில் ரமேஷ் என்பவரின் வீடு உள்ளது. இந்த வீடு திடீரென  தீப்பிடித்து எரிந்தது. ஏறக்குறைய முக்கால்வாசி பகுதி எரிந்த பின் தான் வெளியில் உள்ளவர்களுக்கு தெரிந்திருக்கிறது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

ஆனால் அதற்குள் வீட்டின் அனைத்து பகுதிகளும் முழுமையாக எரிந்து சேதமானது. வீட்டின் உட்பக்கம் வெயிலுக்காக கீற்று கட்டி அதன்மேல் சிமெண்ட் ஓடு வேயப்பட்டதால் உள்ளே தீப்பிடித்து எரிந்த விஷயம் வெளியில் யாருக்கும் தெரியாமல் இருந்து தீ கட்டுக்கு மீறி எரியும் போது தான் வெளியில் உள்ளவர்களுக்கு தெரிந்திருக்கிறது.இந்நிலையில் வீட்டில் இருந்த பொருட்கள், ஆவணங்கள், நகை, பணம் உள்ளிட்டவை அனைத்தும் தீயில் எரிந்து கருகி விட்டது. தீ விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/