அப்போது அவர் பேசுகையில், ஆளும் திமுக ஆட்சியின் பொம்மை முதல்வர் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும்,இ ந்த மின் கட்டண உயர்வால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். காலையிலிருந்து போட்டோ ஷூட் நடத்துவதும் தன் மகனை துணை முதலமைச்சராக ஆக்குவது தான் குறிக்கோளாக உள்ளது என அப்போதுதான் ஸ்டாலினுடைய குறிக்கோளாக உள்ளது மேலும் எம் சி சம்பத் கூறும்போது மின்சார வாரியம் இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது என்பது வெட்கக்கேடானது என்றும் முதல்வருக்கு அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை, அதிமுக ஆட்சி காலத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் டைட்டில் பார்க் அமைக்க வேண்டும் என்று முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் கோரிக்கையும் விடுத்தார் ஆர்ப்பாட்டத்தில் கே.என்.தங்கமணி, சேவல் ஜி.ஜெ.குமார், ஆர்.வி . ஆறுமுகம், தெய்வ.பக்கிரி,கே.காசிநாதன், முதுநகர் பகுதி செயலாளரும் முன்னாள் கவுன்சிலர் வ.கந்தன் தமிழ்செல்வன், ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன்,கிரிஜா செந்தில் குமார் மற்றும் வடக்கு மாவட்ட ,நகர, ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியும நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய பொருள்களை நிறுத்த முயற்சிக்கும் ஆளும் திமுக அரசை கண்டித்து கடலூரில் முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சரும் கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எம்சி.சம்பத் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
No comments:
Post a Comment