கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின் ரோட்டில் அய்யாசாமி என்பவரின் கூரை வீடு எதிர்பாராமல் தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்கள், ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து அறிந்து வேதனையுற்ற கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் கடலூர் மேற்குமாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் உமா மகேஸ்வரன், சேத்தியாத்தோப்பு நகரச் செயலாளர் எஸ் ஆர் மணிகண்டன், முன்னாள் நகரச் செயலாளர் எஸ் கே நன்மாறன், நகரப் பொருளாளர் ராமலிங்கம், சர்புதீன், சேத்தியாத்தோப்பு பேரூராட்சி ஒன்றாவது வார்டு கவுன்சிலர் கே பி ஜி கார்த்திகேயன், கீரப்பாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.கருப்பன், சேத்தியாத்தோப்புவார்டு கவுன்சிலர்கள் ஸ்ரீதர், ராமமூர்த்தி, சங்கர் தங்கமணி மற்றும் அண்ணா பிரபாகரன், மணிமாறன், ஹக்கீம், சிவக்குமார் உட்படபலர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment