அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- கலை இலக்கியம் நாடகத்தின் மூலம் தமிழ் வளர்த்து தமிழக அரசியலில் தி.மு.க. தலைவராக இருந்து பல்வேறு சாதனைகள் புரிந்து கலைஞர் மு கருணாநிதி நீண்ட காலம் முதலமைச்சராக பணியாற்றினார்.
அவரது காலத்திலேயே மு.க.ஸ்டாலின் கட்சியில் இளைஞர் அணி செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றார். அதன் பிறகு சென்னை மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர் என்று பல பொறுப்புகளை ஏற்று திறம்பட பணியாற்றி தனது ஆளுமை திறனை வெளிப்படுத்தினார். இதையடுத்து அவருக்கு துணை முதலமைச்சர் பதவியை கலைஞர் வழங்கினார். கலைஞர் மறைவுக்கு பிறகு தி.மு.க. தலைவராகி கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை சந்தித்து முதலமைச்சர் ஆனார்.
உதயநிதி ஸடாலினும் தந்தை வழியில் தி.மு.க இளைஞர் அணி செயலாளர் பொறுப்புக்கு வந்தார். அதன் பிறகு சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பதவிக்கு வந்துள்ளார். கடந்த 2019 மக்களவை பொது தேர்தல் முதல் தொடந்து அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க அமோக வெற்றியை பெற்று வருகிறது.
இந்த தேர்தல் வெற்றிகளுக்கு உதயநிதி முக்கிய பங்காற்றியதை தி.மு.க தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்கள் அனைவரும் அறிவர். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி மிகப் பெரிய போராட்டத்தை தமிழகத்தில் நடத்தி வருகிறார். அமைச்சர் உதயநிதியின் தீவிரமான கட்சி பணி மற்றும் ஜாதி மதம் இனம் மொழி பாராமல் அவர் ஆற்றி வரும் மக்கள் பணியை பார்த்து அவரை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
எனவே தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் 2026 - ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுகின்ற வகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment