அப்போது அதி வேகமாக இயங்கிக் கொண்டிருந்த கன்வேயர் பில்டில், எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொண்டதால், உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதனைப் பார்த்த சக தொழிலாளிகள், உடனடியாக கன்வேயர் பில்ட்யை, நிறுத்திவிட்டு சிக்கிக் கொண்டிருந்த அன்பழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, என்எல்சி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு சென்றனர். அப்போது என்எல்சி இரண்டாவது சுரங்க நுழைவாயிலில் குவிந்திருந்த அவரது உறவினர்கள், ஆம்புலன்சில் இருந்த அவரது உடலைக் கண்டு கதறி அழுதனர்.
மேலும் அவர் உறவினர்கள் உயிரிழந்த அன்பழகனுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், அதுவரை உடலை எடுத்துச் செல்ல விடமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து என்எல்சி அதிகாரிகள் அன்பழகனின் உறவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment