புவனகிரி பேரூராட்சியில் 12-வது வார்டில்தொடரும் குப்பை கொட்டும் பிரச்சனை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 9 July 2024

புவனகிரி பேரூராட்சியில் 12-வது வார்டில்தொடரும் குப்பை கொட்டும் பிரச்சனை.


கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டுகள் இருந்து வருகின்றது. இந்த வார்டுகளில் இருந்து தினமும் அள்ளப்படும் குப்பைகள் 12 வது வார்டு சுடுகாடு அமைந்துள்ள ஆற்றுப்பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன. இங்கு தொடர்ந்து குப்பைகள் கொட்டி எரிக்கப்படுவதால் எழும்பும் புகைமூட்டம் மற்றும் துர்நாற்றம் குடியிருப்பு வாசிகளை அசௌகர்யப்படுத்தி வந்தது. 

இப்பகுதியில் உள்ள சுடுகாட்டையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இது குறித்து புவனகிரி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பலரிடமும் இப்பகுதியில் குப்பைகள் கொட்ட வேண்டாம், வேறு பகுதிக்கு எடுத்துச் செல்லுங்கள் என பலமுறை, தெரிவித்தும்  பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து 12-வதுவார்டுப் பகுதியில் ஆற்றோரம் மற்றும் சுடுகாட்டுக்கு அருகிலும் குப்பை கொட்டுவதை செய்து வருகிறது. இதனை எதிர்த்து நேற்று குப்பை லாரிகளை சிறைபிடித்து திருப்பி அனுப்பினர். 


இன்று மீண்டும் குப்பை கொட்ட வந்த வாகனத்தை குப்பையை கொட்ட விடாமல் திருப்பி அனுப்பினர். அதனால்குப்பை வண்டி திரும்பி பேரூராட்சிக்கே எடுத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கும் போது  இப்பகுதி மக்களை பாதிக்கும் விதமாக இந்த குப்பை கொட்டும் பகுதி இருந்து வருகிறது. அதனால் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், சுடுகாட்டை மக்கள் எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லாமல் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என தெரிவித்து இரண்டு நாட்களாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்று அவர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர். 

No comments:

Post a Comment

*/