புவனகிரி பேரூராட்சி12வது வார்டில் பேரூராட்சி குப்பை வண்டி சிறைபிடிப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 8 July 2024

புவனகிரி பேரூராட்சி12வது வார்டில் பேரூராட்சி குப்பை வண்டி சிறைபிடிப்பு.


கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் 12 வது வார்டில் ஆற்றுப்பகுதியில் சுடுகாடு அமைந்துள்ளது. இங்கு பேரூராட்சி மூலம் குப்பை தரம் பிரிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் அருகிலேயே புவனகிரி பேரூராட்சியின் 18 வார்டுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால் குடியிருப்பு வாசிகளுக்கு மூச்சுத் திணறல், உடல் நலக் கோளாறு, துர்நாற்றம் ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. 

அது மட்டுமல்லாமல் மருத்துவக் கழிவுகளும்  கொட்டப்பட்டு வருவதால் கால்நடைகள் அதனை உண்பதால் வயிறு உப்பிசம் ஏற்பட்டு கஷ்டப்படுகிறது. மேலும் இப்பகுதி மக்கள் சுடுகாட்டைப் பயன்படுத்துவதற்கே சிரமப்பட வேண்டியதாகவுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள். இதனால் பேரூராட்சி குப்பை வாகனத்தை சிறைப் பிடித்து குப்பைகளைக் கொட்டக்கூடாது என தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சிப் பணியாளர்கள் குடியிருப்புவாசிகளிடம் பேசும்போது இருதரப்பினரிடமும் வாக்குவாதம் ஏற்பட்டது. 


குடியிருப்புப் பகுதி மக்கள் தெரிவிக்கும்போது, புவனகிரி பேரூராட்சி நிர்வாகம் அந்தந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்த வார்டுப் பகுதியில் குப்பை கிடங்கு ஏற்படுத்தி கொட்டினால் யாருக்கும் எந்த அசௌகரியமும் ஏற்படாது என்று தெரிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment

*/