சேத்தியாத்தோப்பு அருகே வளைவு பாலத்தில் கார் வாய்க்காலில் பாய்ந்து விபத்து. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 July 2024

சேத்தியாத்தோப்பு அருகே வளைவு பாலத்தில் கார் வாய்க்காலில் பாய்ந்து விபத்து.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் குமாரக்குடி வளைவு பாலம் இருந்து வருகிறது. இந்தப் பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து 20 அடி உயரம் பறந்து வடிகால் வாய்க்காலில் பாய்ந்து விபத்து ஏற்பட்டது.

சொகுசு காரில் வந்த நான்கு பேரில் ஓட்டுநருக்குக்காயம் ஏற்பட்டு நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தப் பாலத்தில் இது போன்று  தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. சேதம் அடைந்துள்ள இந்தப் பாலத்தை புதியதாக மாற்றி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர், இதுவரை பத்துக்கும் மேற்பட்ட விபத்துக்கள் இதேபோன்று ஏற்பட்டுள்ளதால் உடனடியாக பழுதான பாலத்தை மாற்றி அமைக்க வேண்டும் தற்காலிகமாக விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தெரிவித்து வருகின்றனர். 

No comments:

Post a Comment

*/