கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் விழுப்புரம் சரகம் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் முன்னிலையில் இன்று (20-7-2024) நடைபெற்றது. ஆய்வு கூட்டத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாஜ் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி மற்றும் மூன்று மாவட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
சைபர் கிரைம் மூலம் பணத்தை இழந்த 6 புகாரர்களின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கடலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூபாய் 22,44,500 வங்கி மூலம் திரும்பப் பெற்று பாதிக்கப்பட்டவர்களிடம் காவல்துறை கூடுதல் இயக்குனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் வழங்கினார்.
கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறை கூடுதல் இயக்குனர் டேவிட்சன் தேவா சீர்வாதம் , வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டனர். பின்னர் ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள புதிதாக கட்டப்பட்டு வரும் காவல்துறைகளுக்கான குடியிருப்பினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கினார்.
No comments:
Post a Comment