கீழூர் ஊராட்சி ஆயிப்பேட்டை கிராமத்தில் மக்கள் வளர்ச்சியில் மாவட்ட காவல்துறை துவக்க விழாவில் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம் பங்கேற்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 July 2024

கீழூர் ஊராட்சி ஆயிப்பேட்டை கிராமத்தில் மக்கள் வளர்ச்சியில் மாவட்ட காவல்துறை துவக்க விழாவில் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம் பங்கேற்பு.


கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள  கீழூர் ஊராட்சிக்குட்பட்ட ஆயிப்பேட்டை கிராமத்தில் மக்கள் வளர்ச்சியில் கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை இல்லாத  கிராமத்தை உருவாக்கும் நிகழ்ச்சி நெய்வேலி சப் டிவிஷன் காவல் நிலையத்தில் நடைபெற்றது. நெய்வேலி நகர காவல்துறை சார்பில்  ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் ஆயிப்பேட்டை கிராமத்தில் நடைபெற உள்ளது. 

மேலும் துவக்க விழாவில்  நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சுதாகர் தலைமை வகித்தார் நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா  முன்னிலை வகித்தார்.இதில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், ஏசியா பெசிபிக் ரிஜினல் டைரக்டர் பக்தரட்சகன், மருத்துவர் அருண் காந்தி  ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம் பேசுகையில் ஆயிப் பேட்டை  கிராமத்தை குற்றம் நிகழாத கிராமமாகவும குற்றத்திற்கு இடம் கொடுக்காமல் போதை இல்லாத கிராமமாக இருக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பேசினார். இதனை தொடர்ந்து  கிராம மக்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில்  கீழூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி காசிநாதன், துணைத் தலைவர் மோகன்,  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், காவல் உதவி ஆய்வாளர் இளவரசி, பள்ளி ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, காவல்துறையினர், கிராம முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/