கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே இராஜேந்திரசோழகன்கிராமத்தில் கட்டிடத் தொழிலாளி சந்திரசேகர்-வினோதினி தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளோடு் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களின் கூரை வீடு எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. இதனால் வீட்டின் உள்ளே இருந்த அவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர். உடனடியாக அவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்குள் அவர்களின் கூரை வீடு முற்றிலும் எரிந்து சேதமானது.
இதில் வீட்டு உபயோகப் பொருட்கள் மரக்கட்டில், பீரோ, குளிர்சாதன பெட்டி, டிவி, ஆவணங்கள் உள்பட சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment