குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பூதம்பாடியில் மக்கள் வளர்ச்சியில் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 July 2024

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பூதம்பாடியில் மக்கள் வளர்ச்சியில் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பூதம்பாடி கிராமத்தில் மக்கள் வளர்ச்சியில் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியின் அறிமுக கூட்டம் நடைபெற்றது.


கடலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை கண்காணிப்பாளர் செல்வி சௌமியா, குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பூதம்பாடி கிராமத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் பேரிலும்  நெய்வேலி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் ஆலோசனையின் படி மக்கள் வளர்ச்சியில் மாவட்ட காவல்துறை என்ற சேவையில் 10 நாட்கள் தொடர் சேவைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது 

இந்நிகழ்ச்சிக்கு குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் வீரசேகரன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக கடலூர்  மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி சௌமியா குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டாட்சியர் அசோகன்  ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் வளர்ச்சியில் மாவட்ட காவல்துறை என்ற சேவை குறித்து நடைபெறும் இந்த 10 நாட்கள் கருத்தரங்கு  தொடர் நிகழ்ச்சியில் குறைகேட்பு கூட்டம், மருத்துவ முகாம், பள்ளி கோவில்களை தூய்மைப்படுத்துதல், ஏரி குளம் தூய்மைப்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல், விளையாட்டுப் போட்டிகள், மகளிர்காண நிதி மேலாண்மை உள்ளிட்ட ஆலோசனை கூட்டங்கள், போதைப்பொருள், சாலை விபத்து, இணைய வழி குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வுகள், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி தற்கொலை எண்ணத்தை நீக்கி நம்பிக்கையுடன் வாழ வழி செய்தல், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் காவல்துறை சார்பில் நடைபெற உள்ளன. 


இந்த தொடர் நிகழ்சியை பொதுமக்கள் பயன்படுத்தி  கிராமத்தின் வளர்ச்சிகளையும் ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டுமென பேசினார்கள். நிகழ்ச்சியில் 24-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் சிவா பூதம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி துணைத்தலைவர் பாக்யராஜ் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/