கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை ஆர்ய வைஸ்ய மகா சபை தலைவர் சுந்தரேசன் செட்டியார் தலைமையில் நடைபெற்றது திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கை அலங்கரித்து பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.
இந்த விழாவில் சிறப்பு அம்சமாக ஆலயத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆடி வெள்ளியை முன்னிட்டு புவனேஸ்வரி அம்மனாக அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார் ஸ்தல புரோகிதர் ரஜினி சர்மா புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து விஷேச அலங்காரத்துடன் மகா தீபாரதனை காண்பித்தார் இதனை அடுத்து பெண்கள் அம்மனுக்கும் திருவிளக்கிற்கும் ஆரத்தி எடுத்தனர் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment