கடலூரில் நடைபெற்ற கபடி விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 July 2024

கடலூரில் நடைபெற்ற கபடி விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் இரண்டு மாதமாக நடைபெற்ற கோடைகால சிறப்பு கபடி பயிற்சி முகாமில் பங்கு பெற்ற கபடி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு  கடலூர் மாவட்ட சீனியர் கபடி வீரர்கள் சார்பில் கடலூர் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  S. பிரபாகரன்  விளையாட்டு சீருடை வழங்கினார். 

பின்னர்  விளையாட்டு வீரர்களுக்கு கபடி விளையாட்டின்  நன்மையையும், விளையாட்டு மூலம் அரசு பணி கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், சீனியர் கபடி வீரர்கள் கூறும் அறிவுரைகளை பின்பற்றி  சிறந்த விளையாட்டு வீரர்களாக வரவேண்டும்  என அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில  போக்குவரத்து காவல்  ஆய்வாளர் முத்துக்குமரன், ஆயுதப்படை ஆய்வாளர் பரமேஸ்வர பத்மநாபன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், பெரியார் கலை கல்லூரி உடற்கல்வி இயக்குனர்  குமணன், உடற்கல்வி துணை இயக்குனர் மாரிமுத்து, உடற்கல்வி இயக்குனர்கள் திருமதி உமா, திருமதி சந்தோசம் மற்றும் கடலூர் மாவட்ட சீனியர் கபடி வீரர்கள்  அனைவரும் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினர். 

No comments:

Post a Comment

*/