கொரோனாவால் நிறுத்தப்பட்ட நெய்வேலி புத்தக கண்காட்சி, நான்கு ஆண்டுகளுக்கு, கோலாகலமாக தொடங்கியது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 5 July 2024

கொரோனாவால் நிறுத்தப்பட்ட நெய்வேலி புத்தக கண்காட்சி, நான்கு ஆண்டுகளுக்கு, கோலாகலமாக தொடங்கியது.


கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில், வருடம் தோறும் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அவ்வாறு நடைபெறும் இப்புத்தக கண்காட்சி தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய புத்தகக் கண்காட்சியாக நடைபெறும். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால்,  நிறுத்தப்பட்ட நெய்வேலி புத்தகக் கண்காட்சி, இன்று  தொடங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் மற்றும் நெய்வேலி என்எல்சி சேர்மன் பிரசன்னாகுமார் மோட்டுபள்ளி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இன்று தொடங்கிய இப்புத்தக கண்காட்சி, அடுத்து. பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 160 பதிப்பகத்தை சேர்ந்த 170 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

இக்கண்காட்சியில் கல்வி, பொருளாதாரம், இலக்கியம், கணிதம், பொறியியல், அறிவியல், கவிதை, அரசியல், கல்லூரி, சிறுகதைகள், நாவல், மற்றும் மாணவ, மாணவிகளுக்கான போட்டித் தேர்வு புத்தகங்கள்,  - உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் அனைத்து விதமான புத்தகங்களும் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் நாட்டின் தலைசிறந்த பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், தனித்தனி  அரங்குகளாக அமைத்து உள்ளனர் .


மேலும் குழந்தைகளுக்கு ஓவியப் போட்டிகள், கட்டுரை போட்டிகள் குழந்தைக்குத் தேவையான குறுந்தகடுகள், மென்பொருள்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ராட்டினங்கள் உள்ள பல அம்சங்கள் நிறைந்து உள்ளது. கல்வியில் பின்தங்கியுள்ள கடலூர் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு, கல்வி அறிவை வளர்த்துக்கொள்ள நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறப்பு அம்சமாக உள்ளது. இக்கண்காட்சியில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பல மாவட்டத்திலிருந்து வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

*/