பூதங்குடி எஸ். டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அமிர்தாலயா நுண்கலை அகாடமி இணைந்து நடத்திய சலங்கை பூஜை விழா பூதங்குடி எஸ். டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சாமுவேல் சுஜின் நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபா சுஜின் (குழந்தைகளாக மருத்துவர்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
விழாவில் பல்வேறு பரதநாட்டிய கலைஞர்கள்( பள்ளி மாணவிகள்)தங்களது அசாத்திய திறமையையும் பரதக் கலையின் நுட்பத்தினையும் வெளிப்படுத்தி காண்போரை வியப்பிலாழ்த்தினர். இதில் சிறப்பாக பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்களும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment