பரங்கிப்பேட்டை கிளை நூலகத்தில் நூலகருக்கு பணி நிறைவு பாராட்டு விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 28 July 2024

பரங்கிப்பேட்டை கிளை நூலகத்தில் நூலகருக்கு பணி நிறைவு பாராட்டு விழா


பரங்கிப்பேட்டை கிளை நூலகத்தில் நூலகராக பணியாற்றி வரும் டாக்டர் எஸ். ஆர்.அரங்கநாதன் விருது பெற்ற பா. உத்திராபதி வரும் 31.07.2024 அன்று ஓய்வு பெறுவதை முன்னிட்டு வாசகர் வட்டம் சார்பில் இன்று பாராட்டு விழா நூலகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கடலூர் மாவட்ட பொது நூலகத்துறை நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார் வாசகர் வட்ட தலைவர் சோ.தங்கவேல் பி.ஏ.பி. எல். வரவேற்புரை நிகழ்த்தினர் விழாவில் பேரூராட்சி மன்ற உறுப்பினரும், நூலகப் புரவலருமான டாக்டர் கோ.அருள் முருகன் முன்னிலை வகித்தனர் நூலகப் புரவலர் ஜ.முகமது கவுஸ், ஓய்வு பெற்ற வில்லியநல்லூர் திருவள்ளுவர் உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோ.சச்சிதானந்தம் வில்லியநல்லூர் மு.இராஜேந்திரன் ஓய்வு பெற்ற நூலகர் புலவர் அ.மார்க்கண்டேயன், பொன்னேரி ஓய்வு பெற்ற முதுநிலை ஆசிரியர் இரா.ஜெனமேஜெயன் கடலூர் மாவட்ட முதன்மை கல்வித்துறையில் பணிபுரியும் வே. இராஜதுரை, நூலகப் புரவலர்கள் அகரம் தி.வேல் முருகன், மரைன் பயாலஜி நா.நடராஜன் பொற்செல்வி கணேசன் உமா மகேஸ்வரி, மயன் சுக்கூர், உறுப்பினர்கள் இரா. இராஜகோபால், க.வடிவேல் புதுகுப்பம் இராமசாமி, ஆசிரியர் க.சங்கர், பொன்னந்திட்டு ந.நவீதா. பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் குமார். தாஹா உட்பட பலர் வாழ்த்தி பேசினர் வாசகர் வட்டத்தின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது மயன் கட்டுமான நலச்சங்கத்தின் சார்பில் வாழ்த்து மடல் வழங்கி நூலகரை கௌரவித்தனர் ஏற்புரையை நூலகர் உத்திராபதி வழங்கினார் முடிவில் உறுப்பினர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


- செய்தியாளர் சாதிக் அலி

No comments:

Post a Comment

*/