கடலூர் மாவட்டம் புவனகிரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு புவனகிரியில் கட்சியினர் கொடியேற்றி மரக்கன்றுகள் வழங்கினர் புவனகிரி நகரச் செயலாளர் க.கோபிநாத் தலைமையில் புவனகிரி பாலக்கரையில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்.
இதே போன்று பெருமாத்தூர் பகுதியில் மூன்று இடங்களிலும் கீழ் புவனகிரி பகுதியில் மூன்று இடங்களிலும் மொத்தமாக ஏழு இடங்களில் கட்சியினர் கொடியேற்றி மரக்கன்றுகள் வழங்கினர் இதில் மாநில நிர்வாகிகள் வேல்முருகன் பிரபு ஜெகன் செட்டியார் மாவட்ட நிர்வாகிகள் ஜெயசீலன் வழக்கறிஞர் இளையராஜா வைத்தி சரண் அர்ஜுனன் ரவி நகர நிர்வாகிகள் வீரமணி சர்மா செல்வம் புரட்சிக் கதிரவன் கணேசன் ராஜவேல் கௌதம் அருள் ஏழுமலை ஜீவானந்தம் அப்பு செந்தில் விஜய் ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment