பொருளாதார பின்தங்கிய கிராமப்புற இளைஞர் மாணவர்களுக்கு தொழுல் முனைவு ஆலோசனை வழங்கப்பட்டது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 July 2024

பொருளாதார பின்தங்கிய கிராமப்புற இளைஞர் மாணவர்களுக்கு தொழுல் முனைவு ஆலோசனை வழங்கப்பட்டது


பாரதீய யுவ சக்தி டிரஸ்ட்  BYST 1992 - ம் ஆண்டு தொடங்கப்பட்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற இளைஞர்களின் தொழில்முனைவு யோசனைகளை அனுபவமிக்க ஆலோசகர்களின்  மூலம் வெற்றிகரமான தொழில்களாக மாற்றி நாட்டின் வேலைவாய்ப்பை பெருக்க உதவும் தொண்டு நிறுவனம்  ஆகும்.                      

தொழில் முனைவோர்களுக்காக செயல்படும் இந்நிறுவனம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி  இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக கடலுர் மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல் CISCO நிறுவனத்தின் நிதி உதவியுடன் அலுவலகம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.


இந்நிறுவணத்தின் சார்பாக பண்ருட்டி வட்டம் அன்னை வேளாங்கண்ணி பாலிடேக்கினிக் கல்லூரியில் 05.07.2024 அன்று  தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டதில் 100க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் BYST களஅலுவலர் கு. சாய் கிருஷ்ணன், அவர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார், கல்லூரி முதல்வர் திரு. சவரிராஜ்  வாழ்த்துறை வழங்கினார் நாகரத்திணம் கள அலுவலர் வரவேற்புறை கூறினார். திரு.ஜோசப் கஸ்மீர்  மாவட்ட தலைமை அலுவலர்  சிறப்புரை  வழங்கினார். இறுதியாக கள அலுவலர் திரு.P.ராதாகிருஷ்ணன் நன்றியுரை கூறினார்.


இத்துடன் புதிய தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று துடிப்புடன் இருக்கும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தொழில் ஆலோசனை பெற விரும்பினால் 9952259176 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளாம்.

No comments:

Post a Comment

*/