சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் விசிக கட்சியினர் கொடிக்கம்பம் நட்டத்தில் பதற்றம் அனைத்து கட்சியினரும் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 July 2024

சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் விசிக கட்சியினர் கொடிக்கம்பம் நட்டத்தில் பதற்றம் அனைத்து கட்சியினரும் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் சிதம்பரம் டு காட்டுமன்னார்கோயில் NH98 தேசிய நெடுஞ்சாலையில் ஓரம் அனைத்து கட்சி கொடி கம்பங்களும் நடப்பட்டுள்ளது இதில் அனைத்து கட்சியினரும் தங்கள் கொடி கம்பங்களின் கொடியேற்றுவது நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.


நேற்றைய தினம் விடுதலை சிறுத்தை கட்சியின் கொடிக்கம்பம் நடப்பட்டது அந்த கொடி கம்பம் இரவுக்கு அப்புறம் காணவில்லை இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது, இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் குமராட்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர் அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்து ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் அழைத்து சென்று 15000 அபராதம் விதித்து விடுவித்துள்ளது, இதனைத் தொடர்ந்து திமுக பாமக அதிமுக பாஜக நாம் தமிழர் பல்வேறு அனைத்து கட்சியினர் தாங்களாகவே முன்வந்து பதற்ற சூழ்நிலை ஏற்படாமல் இருக்க தாங்கள் கொடி கம்பங்கள் அகற்றப்பட்டது.


இனிவரும் காலங்களில் இதுபோன்று பதற்றமான சூழ்நிலை ஏற்படமால் இருக்க கொடி கம்பங்களை சிதம்பரம் டு காட்டுமன்னார்கோயில் நெடுஞ்சாலை மற்றும் பொது இடங்களில் அனுமதிக்க கூடாது என்று சிதம்பரம் கோட்டாட்சியர் இடம் மனு அளித்தனர்.


No comments:

Post a Comment

*/