கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை அருகே தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரியும், ரேஷன் பொருட்கள் தடையில்லாமல் வழங்கிடவும், தமிழகத்திற்குக் காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசையும், அதைப் பெற்றுத் தராத தமிழக அரசையும் கண்டித்து இன்று (25/07/2024) இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்ட (தெற்கு) தேமுதிக செயலாளர் விஜய உமாநாத் தலைமை ஏற்க, சேத்தியாத்தோப்பு பேரூராட்சி செயலாளர் மணிவண்ணன், புவனகிரி மேற்கு ஒன்றியச் செயலாளர் பாலு, புவனகிரி கிழக்கு ஒன்றியச்செயலாளர் குமரேசன் ஆகியோர் வரவேற்புரையாற்ற, மாநில கலை இலக்கிய அணி துணைச் செயலாளர் பிரசன்னா கண்டன உரையாற்ற, வருகை தந்த அனைவருக்கும் மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் எஸ் கே. ரமேஷ் நன்றியுரை கூறினார்.
No comments:
Post a Comment