கடலூரில் மாவட்ட நீதித்துறை மற்றும் காவல்துறை சார்பாக ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 July 2024

கடலூரில் மாவட்ட நீதித்துறை மற்றும் காவல்துறை சார்பாக ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.


சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் கடலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி வழிகாட்டுதலின் பேரில் இன்று (26.07.2024)-ஆம் தேதி மாலை 4 மணிக்கு கடலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் கூட்ட அரங்கில் கடலூர் மாவட்ட நீதித்துறை மற்றும் காவல்துறை சார்பாக ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 

கடலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்  ப.நாகராஜன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  இரா.இராஜாராமன்,  முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டியும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் உள்ள தலைமறைவு குற்றவாளிகளை  விரைந்து கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்தி முடிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 

மேலும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விசாரணைக்கு சாட்சிகளை விரைவாக முன்னிலைப்படுத்தி வழக்குகளை நடத்தி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கருத்துரை வழங்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கடலூர் மாவட்ட அமர்வு நீதிபதி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் முனைவர் திருமதி. லட்சுமி ரமேஷ், மாவட்ட அமர்வு நீதிபதி  பிரகாஷ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், தேவநாதன், பிரபாகரன் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குற்றவியல் நீதித்துறை நடுவர்களும் கலந்து கொண்டனர். அரசு வழக்கு நடத்துமை துணை இயக்குநர் அம்சத்அலி, அரசு வழக்கறிஞர்கள், உட்கோட்ட துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/