புவனகிரி அருகே வடக்குத்திட்டை ஊராட்சியில் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 July 2024

புவனகிரி அருகே வடக்குத்திட்டை ஊராட்சியில் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம்.


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வடக்குத்திட்டை ஊராட்சியில் உதவும் கரங்கள் பவுண்டேஷன் பி வெல் மருத்துவமனை கடலூர் மற்றும் எக்விடாஸ் அறக்கட்டளை இணைந்து கண் மற்றும் பொது மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது .ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வேலாயுதம் வரவேற்றார்.

செவிலியர் கலைச்செல்வி பாஜக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருமாவளவன்  உதவும் கரங்கள் பவுண்டேஷன் நிறுவனர் அருண்மொழி எக்விடாஸ் அறக்கட்டளை சிஎஸ்ஆர் மணிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் அருண்குமார் தலைமையில் மருத்துவர்கள் நவீன், ஹேமா, சாதனா நியூ விஷன் கேர் ஆப்டிகல்ஸ் விக்னேஷ், ராணி, செவிலியர்கள் சினேகா, மஸ்கூரா மற்றும் நேதாஜி பார்த்திபன் கொண்ட மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் வழங்கினார்.


மேலும் இந்த முகாமில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி தங்கமணி, கோபாலகிருஷ்ணன், ஜோதி சக்திவேல், மாரியம்மாள் கந்தன், உமா ஜெயபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணி நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

*/