இந்நிலையில் தர்மராஜுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகறாறு ஏற்படுவது வழக்கம். இவ்வாறான சூழலில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த தர்மராஜ் தனது மனைவியிடம் வழக்கம்போல் தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து மனைவியை சரா மரியக வெட்டினார். அப்பொழுது அதனை கவுசல்யா தடுத்தபோது அரிவாள் வெட்டு கை மற்றும் தலை பகுதிகளில் வெட்டு விழுந்து காயம் ஏற்பட்டது.
மேலும் ஆத்திரம் தீராததால் அருகில் கிடந்த கட்டையை எடுத்து சராசரியாக தாக்கினார். இதில் கௌசல்யா நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அருகில் இருந்த உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கையில் 18 தையல் போடப்பட்டது. இது குறித்து கௌசல்யா ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பி ஓடிய கௌசல்யாவின் கணவர் தர்மராஜை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
No comments:
Post a Comment