கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே மிராளூர் கிராமத்தில் ஸ்ரீ பெரியாண்டவர், பெரியநாயகி கோவில் புணரமைப்பு பணி நடைபெற்று வந்தது. இப்பணிகள் முடிவுற்றபின் கிராம மக்களால் கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
பின்னர் முதல் மற்றும் இரண்டாம் காலம் யாகசாலை பூஜையில் மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்று புனித நீர் கலசம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோவில் கோபுரத்தின் மீது கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மகா மந்திரங்கள் முழங்க புனித நீர் கோவில் கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேக தரிசனம் செய்து மூலவரை வணங்கியும் சென்றனர்.
No comments:
Post a Comment