தெற்கு பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான ஓர் அடுக்கு குழு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 5 July 2024

தெற்கு பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான ஓர் அடுக்கு குழு கூட்டம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட  தெற்கு பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான ஓர் அடுக்கு குழு கூட்டம்  நடைபெற்றது. பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் நிர்மலா அனைவரையும் வரவேற்று பேசினார் இந்த கூட்டமானது ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையிலும் கிராம நிர்வாக அலுவலர் தலைமையிலும் நடைபெற்றது இக்கூட்டத்தில் ITK தன்னார்வலர்கள், வார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி பொறுப்பாளர்கள், SMC உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக ஆசிரியர் பயிற்றுனர் திருவாளர் ஏழுமலை அவர்கள் கூட்டத்தின் அவசியம் பற்றியும், தேவை பற்றியும் எடுத்துக் கூறினார். மேலும் கூட்டத்தில் பள்ளி செல்லா  மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்த்தல், போதைப் பொருட்கள் ஒழிப்பு, இளம் சிறார் திருமணம் நடைபெறாமல் தடுத்தல், பாலியல் வன்கொடுமை தடுப்பு, முதலான கருத்துகள் பற்றி விவாதிக்கப்பட்டது. தடுப்பு முறைகள் பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில் இறுதியாக ஆசிரியர் பீட்டர் ஆனந்தராஜ் நன்றியுரை கூறினார்.

No comments:

Post a Comment

*/