கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் மாதா கோயில் சாலை , வட்டம் - 24- ல் அமைந்துள்ள ஜவகர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 'போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி' நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி வாகன வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கு P. அருளழகன், CM / Transport / NLC & ASST . Secretary / Schools / JES . அவர்கள் தலைமை வகித்தார், நெய்வேலி ஜவகர் பள்ளியின் தமிழாசிரியர் V. K. செல்வராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார், நெய்வேலி காவல் ஆய்வாளர் K. சுதாகர் மற்றும் நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் N.பிரான்சிஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போக்குவரத்து விதிமுறைகள் , பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சார்ந்த பல்வேறு செய்திகளையும் கூறி சிறப்புரையாற்றினர், மேலும் பள்ளி வாகன ஓட்டுனர்களும், உரிமையாளர்களும், பெற்றோர்களும் தங்கள் குறைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் காவல்துறை ஆய்வாளரிடமும் மோட்டார் வாகன ஆய்வாளரிடமும் நேரடியாக கேட்டு அறிந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டு அனைவரும் மோட்டார் வாகன ஆய்வாளர் முன்னிலையில் போக்குவரத்து விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றனர் . இறுதியாக ஜவகர் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ஜோன் அலெக்ஷியஸ் மரியாள் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள் . நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஜவகர் பள்ளியின் தமிழாசிரியர் வி.சசிகுமார் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
No comments:
Post a Comment