சேத்தியாத்தோப்பு அருகே விழுப்பெருந்துறையில் நடந்த சிறப்புமிக்க தீமிதி திருவிழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 July 2024

சேத்தியாத்தோப்பு அருகே விழுப்பெருந்துறையில் நடந்த சிறப்புமிக்க தீமிதி திருவிழா.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் உள்ளது விழுப்பெருந்துறை கிராமம், இக்கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் வேண்டுதலுடன் காப்புக் கட்டிக்கொண்டு பத்து நாள் விரதம் இருந்து தீக்குழியில் இறங்கி தீ மிதிப்பது தொன்று தொட்டு சீரும் சிறப்புமாக நடந்து வருகிறது. 

அதைத்தொடர்ந்து இந்த ஆறாவது ஆண்டு தீமிதி திருவிழாவும், பக்தர்கள் ஆடி மாதம் 1-ஆம் தேதி காப்புக் கட்டி விரதம் இருந்து, தொடர்ந்து பத்து நாட்களாக சுவாமி வீதியுலா நடைபெற்று, (26/07/24) வெள்ளிக்கிழமை தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என நிறைய பக்தர்கள் வேண்டியதை நிறைவேற்றித்தரும் அருள்மிகு முத்துமாரியம்மனை மனதார வேண்டிக் கொண்டு தீக்குழியில் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் இறங்கி தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த தீமிதி திருவிழாவில் விழுப்பெருந்துறை கிராமம் மட்டுமல்லாமல் அதன் சுற்றுவட்டார கிராம மக்களும்  ஏராளமானவர்கள்  திரண்டு வந்து இந்த முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி நிகழ்ச்சியை கண்டுகளித்து முத்துமாரியம்மனை பக்தியுடன் வணங்கிச் சென்றனர். விழாவினை விழுப்பெருந்துறை கிராம மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் முன்னின்று ஏற்பாடு செய்து சீரும் சிறப்புமாக நடத்தினர். 

No comments:

Post a Comment

*/