சேத்தியாத்தோப்பு அருகே பழுதாகி ஆபத்தான நிலையில் இயங்கி வரும் ரேஷன் கடைகட்டிடத்தை புதிதாக மாற்றி அமைக்க கோரிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 July 2024

சேத்தியாத்தோப்பு அருகே பழுதாகி ஆபத்தான நிலையில் இயங்கி வரும் ரேஷன் கடைகட்டிடத்தை புதிதாக மாற்றி அமைக்க கோரிக்கை.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி கிராமத்தில் நியாய விலை கடை இருந்து வருகிறது. இந்தக் கடை இருக்கும் கட்டிடம் தற்போது பழுதடைந்து உள்ளது.கட்டிடத்தின் பல பகுதிகளில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து, பொருட்கள் வாங்க வரும் பொது மக்களை அச்சுறுத்தி வருகின்றன. 

மேலும் நியாய விலைக் கடை உள் பகுதியில் பழுதானதின் காரணத்தினால் மழைநீர் உள்ளே புகுந்து சொட்டுவதால் பொருட்கள் சேதம் அடைந்து வருகின்றன. மேலும் அது நியாய விலை கடைக்கு பொருட்கள் வாங்கும் வரும் பொது மக்களுக்கும் பெரும் தொந்தரவாக இருப்பதால், தற்போது நியாய விலை கட்டிடத்தின் மேலே மழைநீர் உள்ளே புகாதவாறு பாலித்தீன் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு உள்ளது. அதனால் இந்த பழுதான நியாய விலை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் அமைத்துத் தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் அது நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது. 


இந்த நியாய விலை கடை சேதமடைந்திருக்கும் காரணத்தினால் அங்கே பொருட்கள் வாங்க வரும் பொது மக்களும் அதில் பணியாற்றுபவர்களும் ஒருவித அச்சத்துடனேயே இருந்து வருவதாக கூறுகின்றனர். அதனால் உடனடியாக புதிய நியாய விலைக் கடை அமைத்துத் தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment

*/