கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளதால் நாள் தோறும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பிரபல தனியார் உணவகத்தில் உணவருந்தி செல்வது வழக்கம் இந்த நிலையில் நேற்று இரவு குடும்பத்தினருடன் குழந்தைகளோடு வந்திருந்த ஒருவர் குழந்தைகள் சாப்பிடுவதற்காக தோசை ஆர்டர் செய்துள்ளார்.
இந்த நிலையில் பரிமாறப்பட்ட தோசையில் ஈ கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் ஹோட்டல் நிர்வாகத்துடன் இதுகுறித்து கேட்ட பொழுது ஹோட்டல் ஊழியர்கள் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர் மேலும் மற்றொரு வாடிக்கையாளருக்கு பரிமாறப்பட்ட நெய் தோசையிலும் ஈ கடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர் மீண்டும் இது குறித்தும் ஊழியர்களிடம் கேட்டபொழுது ஹோட்டல் நிர்வாகம் அலட்சியமாக பதில் கூறியுள்ளது அடுத்தடுத்து ஒரே நேரத்தில் பரிமாறப்பட்ட தோசையில் ஈ கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் நெய்வேலியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் ஹோட்டலின் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment