கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கருங்குழி கைகாட்டிப் பகுதியில் வயல்வெளியில் டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரின் இடுக்கில் ஒருவர் சிக்கி அழுகிய நிலையில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். டிரான்ஸ்பார்மரில் உள்ள காப்பர் காயிலைத் திருடுவதற்காக டிரான்ஸ்பார்மரில் ஏறியிருக்கலாம் என்று மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் தங்கள் சந்தேகத்தை தெரிவிக்கின்றனர்.
இறந்தவரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இந்த சம்பவம் நடந்து இரண்டு அல்லது மூன்று நாட்களாக இருக்கும் என்பதால் வயல்வெளிக்கு கூலி வேலைக்குச் சென்றவர்கள் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதைக் கண்டு பின்னர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பிறகு வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தீயணைப்பு துறையினரும்சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். இந்த சம்பவம் வடலூர் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment