இந்நிலையில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் அவர்கள் அறிவித்திருந்த நிலையில் மருதூர் காவல் நிலைய காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் அதனை பொருட்படுத்தாமல் சாலையின் ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக பெஞ்ச் அமைத்து அதன் மீது மது பிரியர்களுக்கு தேவையான தண்ணீர் பாட்டில்கள் மற்றும் மது அருந்துவதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள் ,தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், சிகரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து விற்று வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த 06/07/24 அன்று ஜெயங்கொண்டான் அரசு மதுபான கடையில் மது வாங்கிய மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான சைடிஷ் களை வாங்க வீரமணி என்பவரது கடையின் எதிரே சாலையில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியதால் நோயாளியை ஏற்றுக்கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் பள்ளி வாகனம் செல்ல முடியாமல் சுமார் ஒரு மணி நேரமாக அதே இடத்தில் நின்றது இதைக் கண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ் என்பவர் அவருடைய செல்போனில் புகைப்படம் எடுத்து காவல்துறையினருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருதூர் காவல்துறையினர் பொதுமக்கள் மற்றும் 108 வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தினார் இதனால் ஆத்திரமடைந்த விரமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று இரவு சுமார் ஒன்பது மணி அளவில் விசிக பிரமுகரான ராஜ் என்பவரை பயங்கர ஆயுதங்களுடன் கொலை பெரிய தாக்குதல் நடத்தினர் இதில் மயக்கம் அடைந்த விசிக பிரமுகர் ராஜ் மயங்கிய நிலையில் கீழே விழுந்தார் தடுக்கச் சென்ற ராஜ்யின் மனைவி சுகந்த மலர் என்பவரையும் தலை முடியை பிடித்து கீழே தள்ளி அடித்துள்ளனர்.
இதைக் கண்ட உறவினர்கள் மருதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மயங்கி கிடந்த விசிக பிரமுகர் ராஜுயை108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜமுத்தையா மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
போதை பொருள் விற்பனைக்கு எதிராக மாவட்ட காவல்துறை சார்பில் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் போலீசார் எச்சரித்தும் அதனை பெரிதும் பொருட்படுத்தாமல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் கள்ளச் சந்தையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மற்றும் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த விசிக பிரமுகரை கொலை வெறி தாக்குதல் நடத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment