கடலூர் மாவட்டம் வடலூர் குறிஞ்சிப்பாடி சாலையில் ஐயனேரி உள்ளது மிகவும் பழமையான ஏரியான இங்கு நெய்வேலி என்எல்சி நிறுவன சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சேகரிக்கப்பட்டு ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை வைத்து சேராகுப்பம் பகுதி விவசாயிகள் நடவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் கோடை காலம் தொடங்கியது முதல் ஏரி முற்றிலுமாக நீர் வரத்தின்றி காணப்படுகிறது.
என்எல்சி நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஏரி முற்றிலுமாக வறண்டு சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது, இதனால் துர்நாற்றம் வீசி வருவதோடு நோய் தொற்று பரவும் அவல நிலை தொடர்ந்து வருகிறது, மேலும் விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீரை பயன்படுத்த முடியாமல் சேராக்குப்பம் பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர் எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment