கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது முன்னதாக மே மாதம் 10ம் தேதி காப்பு கட்டப்பட்டது அதனைத் தொடர்ந்து அம்மன் வீதி உலாவும் நடைபெற்ற நிலையில் மூன்றாம் நாள் 12ஆம் தேதி மகாபாரத சொற்பொழிவு ஆரம்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து 29 நாட்கள் வில் வளைத்தல் கழுகு மரம் ஏறுதல் பூ எடுத்தல் அம்மன் திருக்கல்யாணம் அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது.
பாரதங்கள் படிக்கப்பட்டு என 29 நாட்கள் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்ற நிலையில் முப்பதாம் நாள் காலை 6:00 அளவில் தீக்குழியில் தீ மூட்டப்பட்டது மாலை 4 மணி அளவில் அகலம் குலக்கரை சென்று சக்தி கரகம் தால் கரகம் அக்கினி கரகம் ஜோடிக்கப்பட்டு கடைத்தெரு வழியாக சுற்றி வந்து மாலை 5:30 மணி அளவில் தீ மூட்டப்பட்ட தீக்குழியில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள் இவ்விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் அருளை பெற்றனர்.
No comments:
Post a Comment