கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதிக்குட்பட்ட நைனார்குப்பத்தை சேர்ந்தவர் தமிழ் பிரியன். இவர் வட்டம் - 20 -ல் இருந்து தனக்கு சொந்தமான கார் மூலமாக, தனது வீட்டிற்கு, சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது காரின் முன் பக்க டயர் வெடித்ததை கூட கவனிக்காமல், அதிக மதுபோதையில் ரோட்டில் தாறுமாறாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது வட்டம் 29-ல் உள்ள மெயின் ரோடு வழியாக செல்லாமல், அருகில் இருந்த குறுக்கு வழியில் செல்வதற்காக முற்பட்டபோது, காரனது கட்டுப்பாட்டை இழந்து, 8 அடி பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதனைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக சென்று காரில் இருந்த நபரை மீட்டனர். இதுகுறித்து நெய்வேலி தெர்மல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில், காரின் முன்பக்க டயர், வெடித்ததை கூட கவனிக்காமல், பள்ளத்தில் கொண்டு போய், காரினை விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment