சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த தெய்விக பக்தர்கள் பேரவை இராமர் கோயிலில் மடி ஏந்தி பிராத்தனை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 28 June 2024

சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த தெய்விக பக்தர்கள் பேரவை இராமர் கோயிலில் மடி ஏந்தி பிராத்தனை.

சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு 400 ஆண்டு காலமாக  பிரமோற்சவம் நடைபெறாமல் உள்ளது பிரம்மோற்சவம் நடத்த தமிழக இந்து சமய அறநிலைத்துறை மற்றும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் டிரஸ்டிகிலும் முன்வந்தும் கூட பிரமோற்சவம் நடத்த பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


சைவ  வைணவ பாகுபாட்டை கைவிட்டு  பிரம்மோற்சவம் நடத்த பொது தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு வழக்க வேண்டி கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரம் மேல வீதியில் உள்ள ஸ்ரீ கோதண்ட ராமர் ஆலயத்தில் தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.


தெய்வீக பக்தர்கள் பேரவையினர் மடி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். மேலும் வெற்றிலை பாக்குடன்  வினோதமான கோரிக்கை மனுவை தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெமினி எம்.என்.ராதா சிதம்பரம் நடராஜர் கோவில் பொது  தீட்சிதர்கள் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார்


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் P ஜெகதீசன் 

No comments:

Post a Comment

*/