கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் உள்ள உய்யக்கொண்டராவி கிராமத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக அருகில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு செல்வார்கள் பெரும்பாலும் மாலை நேரத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யப்படுவதே வழக்கம் இறந்தவர்களில் சிலரை எரியூட்டப்படுவதும் உண்டு அப்போது இரவு நேரங்களில் இருளில் ஈமச்சடங்கு செய்யும் அவலநிலை ஏற்படுகிறது.
அந்தப்பகுதி விவசாய நிலங்கள் மற்றும் என் எல் சி க்கு சொந்த மான் பகுதியாக இருளில் விஷ ஜந்துக்கள் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளதால் அப்பகுதியில் புதியதாக மின்கம்பம் அமைத்து மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் அக்கிராமத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டு மைதானம் இல்லாததால் அப்பகுதி இளைஞர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment