சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் தீபக்குமார், மக்கள் மருந்தக உரிமையாளர் கேசவன், கவுன்சிலர்கள் செல்லப்பாண்டியன், அண்ணாஜோதி, கவிஞர் ராபர்ட், சுகாதார ஆய்வாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சங்கத் தலைவரும், கிரீடு தொண்டு நிறுவன நிர்வாகியுமான டாக்டர் நடனசபாபதி தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை டாக்டர் யுகேஷ் தலைமையிலான டாக்டர்கள் ராபியா, பாஷித்தா, பவித்ரா, அனிதா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்றவர்களுக்கு பொது மருத்துவம், காது மூக்கு தொண்டை, கண் சிகிச்சை, குழத்தை நலம். மகப்பேறு, எலும்பு மருத்துவம் மற்றும் தோல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் குறித்து பரிசோதனை செய்து, மருந்து மத்திரைகளும் வழங்கினர். முகாமில் சிதம்பரர்கள் சென்ட்ரல் ரோட்டரி சங்க செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் அருள். ஆதித்யன், குமரவேல், தங்க அன்பழகன், ஜெகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பிம்ஸ் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் ராஜசெல்வம் நன்றி கூறினார்.
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனையுடன், தனியார் கன்ஸ்ட்ரக்சன் இணைந்து இலவச மருத்துவ முகாமை சங்கத் தலைவர் டாக்டர் நடனசபாபதி துவக்கி வைத்தார். புவனகிரி பெருமாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனையுடன், தனியார் கன்ஸ்ட்ரக்சன் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தினர். முகாமில் வழக்கறிஞர் ஜெயபாண்டியன் வரவேற்றார்.
No comments:
Post a Comment