கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கே. ஆலம்பாடி ,சொக்கன்கொல்லை அரசு பள்ளி மற்றும் சிதம்பரம் அருகே தையாக்குப்பம அரசு பள்ளியில் புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் விழா ரோட்டரி சங்க தலைவர் சேஷாத்ரி செயலாளர் சுதர்சன் தலைமையில் நடைபெற்றது. புவனகிரி ஆர் வி பி மருத்துவர் கதிரவன் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வில் புதியதாக ஒன்றாம் வகுப்பு சேர்ந்த மாணவர்களுக்கு அரசு பள்ளிகளை ஆதரிப்போம் குழு சார்பாக வெள்ளி நாணயம் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்ட மரக்கன்றுகளை அடுத்த ஆறு மாதங்களுக்கு மாணவர்கள் நல்ல முறையில் பராமரித்து வளர்க்கும் பட்சத்தில் அந்த மாணவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் ரோட்டரி உறுப்பினர்கள் கிருஷ்ணராஜ் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர் பெருமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment