இதில் கடலூர் மாவட்ட வீரு கிக் பாக்சிங் மாணவர்கள், தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்சிங் அணியுடன் இணைந்து. தமிழகம் சார்பாக தேசிய அலைவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் எஸ்.சுபாஷினி, ஏ..எழில் பாத்திமா, ஜெ. அக்ஷயா, ஆர்.நந்தினி, ஆர்.நவீன்குமார் ஆகியோர் முதல் பரிசும், டீம் போட்டியில் எ. எழில் பாத்திமா, எஸ். சுபாஷினி ஆகியோர் இரண்டாம் பரிசும், எஸ். ஹரிஷ்வரன், வி. முகுந்தன், எம்எஸ். ஆதிரைசகானா ஆகியோர் மூன்றாம் பரிசும் பெற்று தமிழகத்திற்கும் நமது மாவட்டத்திற்கும் நமது மாணவர்கள் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீமுஷ்ணம் தவஅமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் செங்கோல், பி.பி.ஜே.கல்லூரியின் நிறுவனர் பிரகாஷ் ஆகியோர் ஸ்ரீமுஷ்ணம் பூவராக ஸ்வாமி திருக்கோயில் முன் மாணவர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து பெருமையுடன் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட வீரு கிக் பாக்ஸிங் சங்கத் தலைவர் சென்சாய். வி. ரெங்கநாதன், செயலாளர். பி. சத்யராஜ், பொருளாளர் பிருத்தியூனன், கராத்தே மாஸ்டர். ஆர். ரவிக்குமார், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி நிர்வாகிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் மாணவர்களை மகிழ்ச்சியுடன் பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள்.
No comments:
Post a Comment